அ.தி.மு.க.,வில் இருந்து 'மாஜி' எம்.எல்.ஏ., நீக்கம்

சென்னை: கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல் பாபு உள்ளிட்ட நான்கு நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக் கையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைச் செயலர் வினாயகமூர்த்தி, மாவட்ட மகளிரணித் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான அழகுவேல் பாபு, கள்ளக்குறிச்சி நகரச் செயலர் பாபு, மாவட்ட மகளிரணி இணைச் செயலர் ரகு என்கிற முகேஷ் ஆகியோர், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.

அவர்கள் தி.மு.க.,வில் இணைய திட்டமிட்டு இருப்பதால், அவர்கள் நீக்கப்பட்டதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Advertisement