மோடியின் முரட்டு அடிமை பழனிசாமி: துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்
சென்னை: சென்னையில் வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது, உதயநிதி பேசியதாவது: சென்னையில் நான் போட்டியிடும் தொகுதி வெற்றியை விட, கார்த்திக் போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதி வெற்றி எனக்கு மிக முக்கியம். அவரை வெற்றி பெற செய்தால், 'ஹைடெக்' தொகுதியாக வில்லிவாக்கத்தை மாற்றுவார்.
கடந்த தேர்தலில் தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை மக்கள் கஷ்டப்படும்போது, பிரதமர் மோடி எந்த உதவியும் செய்யவில்லை. நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் சென்னையை, மத்திய அரசு பழிவாங்குகிறது. மோடியின் முரட்டு அடிமையாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இருக்கிறார்.
பழனிசாமி போல, தரையில் தவழ்ந்து சென்ற அனுபவம் எனக்கு கிடையாது. காலில் விழுவது தப்பில்லை; தான் விழுந்த காலை வாரி விடுவது தான் தப்பு.
நான் உயிரை வாங்குவதாக பேசுகிறார். நீங்கள் நன்றாக வாழ்ந்து, அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலராக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இவ்வாறு உதயநிதி பேசினார்.
அஹாஹா காங்கிரசின் முரட்டோ முரட்டு கொத்ததடிமை யார் ? நாங்களே ஒரு அடிமை ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை உதவி செய்ய முடியாதென்று ஈழ இன அழிப்பின்போது சொன்னது யார் ? காங்கிரசிற்கு அடிமையாக இருந்து கச்சத்தீவை கொடுக்கும்போது பயத்தில் பம்மிகொண்டு இருந்தது யார் ? கர்நாடகத்தின் மீது காவிரிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை காங்கிரசின் மிரட்டல் காரணமாக கதறிக்கொண்டு வாபஸ் வங்கியது யார் ? சொல்லுங்கள்
அடேய் பாலிடாயிலு...இவரு இப்போதான்.. ஆனா உன் தாத்தன் கட்டுமரம், உன்கொப்பன் எல்லாம் ஒரு இருவது வருசத்துக்கு முன்னாடியே முரட்டு அடிமைகளாய் இருந்தவங்கதான் என்று தமிழர்களுக்கு நல்லா தெரியும்......மேலும்
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்
-
கடைசி நேரத்தில் டுவிஸ்ட்... போட்டியில் இருந்து திடீரென விலகிய காங்கிரஸ் வேட்பாளர்
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 குறைவு
-
அரசியல் களத்தில் நடப்பது என்ன? துல்லிய தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை தாமதப்படுத்தக் கூடாது ; பிரதமர் மோடி
-
காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன் தான் விஜயைச் சந்தித்தேன்; உண்மையை உடைத்தார் பிரவீன் சக்கரவர்த்தி