மாநகராட்சி அலட்சியத்தால் குவிந்த குப்பை ;களமிறங்கி துாய்மைப்படுத்திய போலீசார்
ஆவடி: ஆவடி மாநகராட்சியின் அலட்சியத்தால், ஒரு மாதத்திற்கு மேலாக சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையை, ஆயுதப்படை போலீசார் களமிறங்கி அகற்றினர்.
திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சத்தியமூர்த்தி நகர் சாலையில், தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு, சாலையோரத்தில் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் தினமும் குப்பை கொட்டுகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாநகராட்சி ஊழியர்கள், அங்குள்ள குப்பையை அகற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையில், குப்பையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால், கால்நடைகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகரித்தது.
சுதாரித்த போலீசார், புகாரளித்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சியை நம்பாமல், தாமே களமிறங்கினர். 15க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார், நேற்று காலை களத்தில் இறங்கி, குப்பை அப்புறப்படுத்தினர்.
மேலும்
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
-
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு
-
சீமானின் பஞ்சதந்திர கதைகள்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள் பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்