மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா திருத்தேரோட்டத்தில், யானை பின்னே தள்ள, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நுாற்றாண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது.
நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த மாதம், 24ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நேற்று காலை, 6:45 மணிக்கு, சூலத்தேவருடன், மகா சக்தி மாரியம்மன் தம்பதி சமேதரராக, அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட திருத்தேரில் எழுந்தருளினார்.
மாலை, 4:15 மணிக்கு, பக்தர்களின் ஓம் சக்தி கோஷம் முழங்க, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு அம்சமாக, பக்தர்கள் முன்னே இழுக்க, யானை பின்னே தள்ள தேர் மக்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது.கேரளா மாநிலம், பாலக்காடு, செர்புளசேரியிலிருந்து வரவழைக்கப்பட்ட 'மணிகண்டன்' என்ற யானை, பக்தர்களுக்கு உதவியது.
பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, தலைகொண்டம்மன் கோவில் வீதி, தங்கம்மாள் ஓடை என வீதிகளில் தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் பழம், தானியங்கள் வீசி, மழை வளம், வேளாண் வளம், மக்கள் நலன் சிறக்க வேண்டி, அம்மனை வழிபட்டனர்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி