துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை

5

@block_B@ தி .மு.க., ஆட்சி துவக்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக மெய்யநாதன் நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்கு பின் அத்துறை, துணை முதல்வர் உதயநிதியிடம் வழங்கப்பட்டது. அதன்பின் அத்துறை முக்கியத்துவம் பெ ற்றது. விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவற்றில் பல அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. அவற்றின் விபரம்:block_B

* ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரம் மற்றும் தர்மபுரி மலைவாழ் மாணவர்களிடம் திறன் கண்டறியும் போட்டிகள் நடத்தப்பட்டு, விடுதிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும்

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திறனை மேம்படுத்தி, மின்னணு ஆளுமை முறைகள் செயல்படுத்தப்படும்

* ராமநாதபுரம் மாவட்டத்தில், ஒலிம்பிக் நீர் விளையாட்டுக்கான அகாடமி அமைக்கப்படும்

* சென்னையில் உலக தரத்தில், இந்தியாவின் முதல் ஆறு டிராப் ரேஞ்ச் அடங்கிய, 'ட்ராப் மற்றும் ஸ்கீட்' துப்பாக்கி சுடுதலுக்கான சிறப்பு அகாடமி அமைக்கப்படும்

* அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, சில நகரங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

* தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் நல்லொழுக்கத்துடன், சமூகத்திற்கு உரிய பங்களிப்பை அளிக்க செய்வதன் முக்கியத்துவம் கருதி, புதிய இளைஞர் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளை, மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில், கட்டமைப்பு வசதிகள் மாற்றி அமைக்கப்படும்

* தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், விளையாட்டு வீரர்களை ஈர்க்கும் புட்சால், பாக்ஸ் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்காக, முதல்வர் இளைஞர் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்

* சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சர்வதேச தரத்திலான எட்டு தடங்கள் கொண்ட செயற்கை தடகள ஓடுபாதையுடன், இயற்கை புல்தரை கால்பந்து மைதானம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

Advertisement