போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு :புதுச்சேரி நபரிடம் ரூ. 1.26 கோடி மோசடி
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த நபர், போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து, ரூ.1.26 கோடியை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்தவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பிய, அவர் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 1 கோடியே 26 லட்சம் முதலீடு செய்துள்ளார். பின், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன்மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரூ. 50 ஆயிரத்தை சைபர் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
Advertisement
Advertisement