புரிசையில் பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
காஞ்சிபுரம்:விருதசீர நதி குறுக்கே, பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, புரிசை கிராமத்தில் இருந்து, கேசவாவரம் கூட்டு சாலை வழியாக, தக்கோலம் - பேரம்பாக்கம் சாலை இணைக்கும் புரிசை கிராம மண் சாலை உள்ளது. இந்த மண் சாலை குறுக்கே, விருதசீர நதி கடந்து செல்கிறது.
இந்த மண் சாலை வழியாக புரிசை, தண்டலம், வளத்துார், லப்பை கண்டி ஆகிய கிராம மக்கள் கேசவாரம் கூட்டு சாலை வழியாக தக்கோலம், பேரம்பாக்கம், மப்பேடு உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.
மழைக்காலத்தில், புரிசை விருதசீர நதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் போது, வாகனங்கள் தண்ணீரில் மிதந்து செல்ல வேண்டி உள்ளது.
இதனால், ஒரு சில வாகனங்களும் விருதசீர நதியில், அடித்து செல்லப்பட்ட சம்பவங்களும், மழைக்காலங்களில் அரங்கேறியுள்ளன.
எனவே, வாகன விபத்து தவிர்க்கவும், மழைக்காலங்களில் தடையின்றி போக்குவரத்து பயன்பாட்டிற்கு புரிசை விருதசீர நதி குறுக்கே, பாலம் கட்டித்தர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பாஜவை பார்த்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்; நயினார் நாகேந்திரன்
-
மாரியம்மன் கோயில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
-
புள்ளி, கமாவுக்காக எல்லாம் வேட்புமனு நிராகரிப்பு; தேர்தல் அதிகாரியிடம் வேல்முருகன் புகார்
-
கொந்தகையில் நுாற்றாண்டை கடந்த பாசன கிணறு
-
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா தீர்த்தவாரியுடன் நிறைவு
-
திருப்புத்துார் அருகே ரூ 5.47 கோடி பறிமுதல்