தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா தீர்த்தவாரியுடன் நிறைவு

இளையான்குடி:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் அம்மன் அலங்காரங்களுடன் சிம்மம்,குதிரை,காமதேனு,அன்னம், பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா கடந்த 5ம் தேதி நடைபெற்றது.6ம் தேதி மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டினர்.

நேற்று முன்தினம் பால்குடம் மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி, இரவு பூப்பல்லக்கு வீதி உலா நடைபெற்றது.நேற்று இரவு 7:40 மணிக்கு திருக்கோயில் தீர்த்த வாரியுடன் இந்த வருடத்திற்கான திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், தாயமங்கலம் கிராம மக்கள்,பக்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement