மாரியம்மன் கோயில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
தேவகோட்டை:தேவகோட்டை தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைப்பாரி விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தினமும் மாலையில் அம்மன் கரகம் எடுத்து வீதி உலா வந்து கோயிலை அடைந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு விரதமிருந்த பெண்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் முன் வைத்து வணங்கினர். ஏராளமான பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி வேல்காவடி எடுத்து வந்து கோயில் முன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement