செக் ஷன்-17 நில பிரச்னைக்கு தீர்வு: தி.மு.க., வேட்பாளர் உறுதி

கூடலுார்: கூடலுார் சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் திராவிடமணி கூறியதாவது:

கூடலுார் செக் ஷன்-17நிலத்தில் வசிப்பவர்களை அ.தி.மு.க., அரசு ஆக்கிரமிப்பாளர்கள், என்று கூறியதை, தி.மு.க., அரசு மாற்றி அவர்களை அங்கீகரித்து, பட்டா வழங்குவதற்காக, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசின் நடவடிக்கையால், செக் ஷன் -17 நில பிரச்னைக்கு தேர்தலுக்கு பின் தீர்வு கிடைக்கும்.

கூடலுார் பகுதியில் வனவிலங்கு தாக்குதலில் இறந்தவர்களுக்கு கடந்த ஆட்சியில், 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில் அதனை தி.மு.க., அரசு, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகிறது. அரசு தேயிலை தோட்டமான டான்டீக்கு அரசு, 105 ரூபாய் நிதி ஒதுக்கி தொழிலாளர்களின் நிலுவை பண பலன்களை வழங்கியது.குறைந்தபட்ச சம்பளத்தை, 425 ரூபாயாக உயர்த்தி வழங்கியது. தேர்தலில் வெற்றி பெற்று இப்பகுதி மக்கள் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காண்பேன்.

இவ்வாறு திராவிடமணி கூறினார்.

Advertisement