தகராறில் தாய் மகன்கள் மீது வழக்கு

விழுப்புரம்: தகராறில் ஒருவரை தாக்கிய தாய், மகன்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த பில்லுாரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 56; இவரது வீட்டின் துணி துவைத்த தண்ணீர் பக்கத்துவீட்டை சேர்ந்த வரதராஜன் மனைவி தமிழரசி என்பவரின் வீட்டின் பக்கம் சென்றுள்ளது. இதனால், ஏற்பட்ட தகராறில் தமிழரசி, அவரது மகன்கள் தங்கதுரை, சரவணன் ஆகியோர் சேர்ந்து ஜெயக்குமாரை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் தமிழரசி உள்ளிட்ட மூன்றுபேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement