வி.சி., கட்சி தலைவர் திருமாவளன் கள்ளக்குறிச்சியில் = பிரசாரம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வி.சி., மற்றும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் 9ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், வி.சி.கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாலதியை ஆதரித்து, வி.சி.கட்சி தலைவர் திருமாவளவன் இன்று 9ம் தேதி பிரசாரம் செய்கிறார். நயினார்பாளையத்தில் காலை 8 மணி, பெரியசிறுவத்துாரில் காலை 10 மணி, தென்கீரனுாரில் பகல் 12 மணி, நீலமங்கலத்தில் பகல் 3 மணி, விருகாவூரில் மாலை 4 மணி, கூத்தக்குடியில் மாலை 5 மணி, தியாகதுருகத்தில் மாலை 6 மணிக்கு பிரசாரம் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு உளுந்துார்பேட்டையில் தி.மு.க., வேட்பாளர் வசந்தவேலை ஆதரித்து பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனையொட்டி தொகுதிக்குட்பட்ட தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தி.மு.க., வி.சி., காங்., தே.மு.தி.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்குமாறு தொகுதி தேர்தல் பணிக்குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை