உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.03 கோடிக்கு வர்த்தகம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி உழவர்சந்தையில் கடந்த மாதம், 2.03 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகி உள்ளது.
பொள்ளாச்சி உழவர் சந்தையில், மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், அவ்வப்போது காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
காய்கறிகள் தரமாகவும், விலை குறைவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம், 2 கோடியே, 3 லட்சத்து, 39 ஆயிரத்து, 350 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில்,'உழவர் சந்தைக்கு கடந்த மாதம் நாளொன்றுக்கு, 6 லட்சத்து, 56 ஆயிரத்து, 108 ரூபாய் மதிப்புள்ள, 16,207 கிலோ காய்கறிகள் வரத்து இருந்தது. தினமும், சராசரியாக, 64 விவசாயிகளும், 3,241 நுகர்வோர்களும் பயனடைந்தனர்.
கடந்த மாதம் மொத்தம், 502.4 டன் காய்கறி வரத்து இருந்தது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, இரண்டு கோடியே, 3 லட்சத்து, 39 ஆயிரத்து, 350 ரூபாயாகும். மொத்தம், 1,984 விவசாயிகள், ஒரு லட்சத்து, 485 நுகர்வோர்கள் பயனடைந்தனர்,' என்றனர்.
மேலும்
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
-
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு
-
சீமானின் பஞ்சதந்திர கதைகள்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள் பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்