பொள்ளாச்சியில் 14; வால்பாறையில் 6 பேரின் மனுக்கள் ஏற்பு: இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை 'ரிலீஸ்'
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தொகுதியில், 14 பேரில் மனுக்களும், வால்பாறை தொகுதியில், 6 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. நாளை, 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில், கடந்த, 30ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. இதையடுத்து, பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் - பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மனுத்தாக்கல் செய்தனர். மனுத்தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பொது தேர்தல் பார்வையாளர் (பொ) யசேந்திர சிங் தலைமை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் ராமகிருஷ்ணசாமி, வேட்பு மனுக்கள் ஏற்பு, நிராகரிப்பு காரணங்களை விளக்கினார்.
அ.தி.மு.க., - தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் முருகவேல் மனு நிராகரிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலர் கூறுகையில், ''பொள்ளாச்சி தொகுதியில், 23 வேட்பாளர்கள், 34 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒன்பது பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன,'' என்றார்.
வால்பாறை: ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் வால்பாறை தொகுதிக்கான வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா, பொது தேர்தல் பார்வையாளர் பங்கேற்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர், காரணங்களை விளக்கி மனுக்கள் ஏற்பு, நிராகரிப்பு செய்தார்.
அதில், மொத்தம், 16 வேட்பாளர்கள், 29 வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், 6 வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 10 வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவில்லை. உரிய நேரத்துக்குள் வழங்க அவகாசம் வழங்கியும் வழங்கவில்லை. இதனால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
டெபாசிட் செலுத்தாதது, சுயே., வேட்பாளர்களுக்கு முன்மொழிபவர்கள், 10 பேருக்கு குறைவாக இருந்தது, படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாதது, கிரிமனல் வழக்கு குறித்து காலம் பூர்த்தி செய்யவில்லை. ஜாதிச்சான்று வழங்காதது போன்ற காரணங்களினால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறு, கூறினர்.
நாளை இறுதி பட்டியல் நாளை (9ம் தேதி) மாலை, 3:00 மணி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். அதன்பின், சுயே., வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
பொள்ளாச்சி பகுதியில், 20 இடங்களில் தேர்வு செய்து பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு அனுமதி பெற்று பிரசாரம் செய்யலாம். 21ம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற உள்ளது.
மேலும்
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை