மூன்று தொகுதிகளில் இரு பேலட் யூனிட் பயன்படுத்த வாய்ப்பு

தேனி:மாவட்டத்தில் பெரியகுளம்(தனி) தொகுதியை தவிர பிற தொகுதிகளில் ஓட்டுப்பதிவின் போது இரு பேலட் யூனிட்கள் பயன்படுத்தும் சூழல் உள்ளது.

மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பேலட் யூனிட்டில் வேட்பாளர் பெயர், சின்னம் அவற்றின் அருகில் பொத்தான் இடம் பெற்றிருக்கும். இதில் வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்வார்கள். யாருக்கு வாக்களித்தோம் என வி.வி.,பேட் மூலம் பார்க்கலாம். ஒரு பேலட் யூனிட்டில் 15 வேட்பாளர், ஒரு நோட்டா மட்டும் இடம் பெறும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் 15 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து பேலட் யூனிட் பயன்பாடு அதிகரிக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பெரியகுளம்(தனி) தொகுதியில் 15 வேட்பாளர்கள் மனு ஏற்கப்பட்டுள்ளது. சிலர் வாபஸ் வாங்கினாலும் 15க்கு குறைவான வேட்பாளர்கள் தான் இருப்பார்கள். இதனால் அந்த தொகுதியில் ஓட்டுச்சாவடிகளில் ஒரு பேலட் யூனிட் மட்டும் பயன்படுத்தப்படும்.

ஆனால், ஆண்டிபட்டி, கம்பத்தில் தலா 21, போடியில் 19 வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொகுதிகளில் ஓட்டுச்சாவடிகளில் இரு பேலட்யூனிட்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

Advertisement