தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற தேனி வீரர் தேர்வு
தேனி:தேனியை சேர்ந்த அபிமான்சுந்தர் 15,தேசிய கிரிக்கெட் அகாடமி ‛இ' பிரிவில் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தேனியை சேர்ந்த அபிமான் சுந்தர் 2022ல் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன்(டி.என்.சி.ஏ.,) நடத்திய வீரர்கள் தேர்வில் பங்கேற்றார். இடக்கை சுழற்பந்து வீச்சாரளாக திறமையை வெளிப்படுத்தினார். 2024ல் டி.என்.சி.ஏ.,நடத்திய போட்டிகளில் பங்கேற்று, 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தமிழக அணிக்கு தேர்வானார். தொடர்ந்து இந்தாண்டு 16 வயதிற்குட்படோர் அணியில் இடம் பிடித்தார். கடந்த டிச.,ல் கர்நாடகா, சிமோகாவில் நடந்த அபிமான்சுந்தர் பந்து வீச்சு, பேட்டிங்கில் அசத்தினார். அதன் அடிப்படையில் தேசிய கிரிக்கெட் அகாடமி ‛இ' பிரிவில் பயிற்சிக்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தமாதம் உத்தரகண்ட், டேராடூனில் நடக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளதாக தேனி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.