ஐ.ஐ.டி., பி.எஸ். படிப்பை நிதியுதவியுடன் படிக்க வாய்ப்பு

கோவை: ஜே.இ.இ., இல்லாமல் ஐ.ஐ.டி., மாணவராகலாம் என்ற வாய்ப்பை ஐ.ஐ.டி., மெட்ராஸ் 'நான் கேம்பஸ் பி.எஸ்., டிகிரி திட்டத்தில்' வழங்குகிறது. டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேசன்ஸ், மேனேஜ்மெண்ட் மற்றும் டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ், ஏரோனாடிக்ஸ் ஸ்பேஸ் தொழில்நுட்பம் போன்ற நான்கு படிப்புகளை ஆன்லைனில் படிக்கலாம்.

தகுதி தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை பெறலாம். ஆன்லைன் கல்வி என்றாலும் நேரடி ஐ.ஐ.டி., மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். டிகிரி மற்றும் ஐ.ஐ.டி., அலுமினி தகுதிகள் நேரடி பி.டெக்., டிகிரி க்கு இணையானது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குடும்ப வருமான அடிப்படையில் 75 சதவீத சலுகையும், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மற்றும் ஐ.ஐ.டி., சென்னை இணைந்து, எஸ்.சி/ எஸ்.டி., எஸ்.சி.ஏ., மாணவர்களுக்கு முழுக்கட்டணச்சலுகையும் வழங்குகின்றன. வேறு டிகிரி படித்துக்கொண்டே ஆன்லைனில் தொடரலாம். பிளஸ் 2 மட்டுமின்றி பிளஸ் 1 முடித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பி.எஸ்., பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மூலம் எஸ்.சி.,/எஸ்.டி.,/ எஸ்.சி.ஏ., மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு குறித்த தவல்களுக்கு, study.iitm.ac.in/ மற்றும் https://tamilnaduvolunteers.org/scholarship/ என்ற இணையதளங்களை பார்க்கலாம்.

Advertisement