வெறும் பட்டன் அழுத்தும் பணியா? இடைநிலை ஆசிரியர்கள் அதிருப்தி
அன்னூர்;இடைநிலை ஆசிரியர்களை ஓட்டு பதிவு அலுவலர் நிலை மூன்றுக்கு நியமித்ததால் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'வழக்கமாக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிவோர், ஓட்டு சாவடியில் ஓட்டுப்பதிவு அலுவலர் நிலை ஒன்று அல்லது நிலை இரண்டு பதவிக்கு நியமிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை இடைநிலை ஆசிரியர்கள் நிலை மூன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது வாக்காளர் ஓட்டு பதிவு செய்வதற்காக ஓட்டுப்பதிவு இயந்திரத்தை தயார்படுத்த பட்டன் அழுத்தும் பணியாகும்.
வழக்கமாக சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர் ஆகியோருக்கு தான் இந்த பணி வழங்கப்படும். ஆனால் இந்த முறை இடைநிலை ஆசிரியர்களுக்கு நிலை மூன்று பணி வழங்கப்பட்டு, சத்துணவு ஊழியர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிலை இரண்டு பணி வழங்கப்பட்டுள்ளது. இது அதிருப்தி அளிக்கிறது,' என்றனர்.
மேலும்
-
'வீரமரணம்' ராணுவ வீரருக்கு 33ம் ஆண்டு நினைவஞ்சலி
-
தேர்தல் ஊழியர்கள் பணி நியமனம் குளறுபடி அதிகம் என குற்றச்சாட்டு
-
துவங்கியாச்சு ஓட்டுப்பதிவு!
-
சாத்தான்குளம் வழக்கு தண்டனை; போலீசாருக்கு கடும் எச்சரிக்கை
-
2011ல் கொடுத்த வாக்குறுதிகளை 2016க்குள் செய்து கொடுத்துள்ளேன் அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் பெருமை
-
பறக்கும் படை சோதனை ரூ.10.50 லட்சம் பறிமுதல்