சூலூரில் ரூ.1.64 லட்சம் பறிமுதல்

சூலூர்;சூலூரில் இரு வேறு இடங்களில், தேர்தல் பறக்கும் படை சோதனையில், ரூ. 1.64 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சூலூர் தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாநில வரி அலுவலர் விஜயகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் அரசூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், மணியகாரன்பாளையத்தை சேர்ந்த சிவசாமி என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல், 1 லட்சத்து, 4 ஆயிரத்து, 700 ரூபாயை காரில் வைத்திருந்தார். அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், பி.டி.ஓ., வெள்ளிங்கிரி தலைமையில் நடத்திய சோதனையில், திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் சரக்கு ஆட்டோவில், 60 ஆயிரம் ரூபாய் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட, 1 லட்சத்து, 64 ஆயிரத்து, 700 ரூபாய் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement