தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது; திருக்கோவிலுாரில் பயங்கரம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, சொத்தை எழுதி கேட்டு, தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மாடாம்பூண்டி கூட்டு ரோடு, மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் வீரப்பன், 75; இவரது மனைவி சரோஜா, 65; இவர்களுக்கு இரண்டு மகள். ஒரு மகன் உள்ளனர். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இவர்களின் பூர்வீக கிராமமான விழுப்புரம் மாவட்டம், துலுக்கம்பட்டு கிராமத்தில் மகன் உத்திராபதி, 41; வசித்து கொண்டு, செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை மாடாம்பூண்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்த உத்திராபதி, சொத்தை தன் பெயரில் எழுதி தருமாறும், குடிக்க பணம் கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட தகராறில், பெற்றோரை சரமாரியாக தாக்கினார். பலத்த காயமடைந்த தந்தை வீரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் சரோஜா பலத்த காயங்களுடன் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிந்து, உத்திராபதியை கைது செய்தனர்.
சொத்து கேட்டு, தந்தையை பெற்ற மகனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2720 அதிகரிப்பு
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு