தமிழ்ச்சங்க விழாவில் பங்கேற்க அழைப்பு
கோவில்பாளையம்: கவையன்புத்தூர் தமிழ்ச் சங்க விழா வரும் 12ம் தேதி நடைபெறுகிறது.
கவையன் புத்தூர் தமிழ்ச் சங்க இலக்கிய நிகழ்வு, கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் வருகிற, 12ம் தேதி காலை 9:30 மணிக்கு நடைபெறுகிறது. சங்கத்தின் பொதுச்செயலாளர் கணேசன் வரவேற்கிறார். மருத்துவர் கண்ணன் தலைமை வகித்து பேசுகிறார். மருத்துவர் சுப்பிரமணியம், 'விழுப்புண் படாத நாள் எல்லாம்' என்னும் தலைப்பில் பேசுகிறார்.
பெரிய புராண நாயன்மார்களை நினைவு கூரும் நிகழ்ச்சி முகமது ஆரிப் தலைமையில் நடக்கிறது. 'தமிழின் சிறப்பு' என்னும் தலைப்பில் பழனிச்சாமி, 'அறிவோம் ஒரு அரிய செய்தி' என்னும் தலைப்பில் ரோகிணி, 'படித்ததில் பிடித்தது' என்னும் தலைப்பில் தீக்ஷித், 'மகளிர் மாண்பு' என்னும் தலைப்பில் மஞ்சுளா ஆகியோர் பேசுகின்றனர். இலக்கிய விழாவில் பங்கேற்று தமிழமுதம் பருக சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும்
-
நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை
-
அதிமுக கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் சங்கம் ஆதரவு
-
ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ்க்கு நியமன எம்.பி., பதவி
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு