சிக்கிய 200 கோடி ரூபாய்? நெல்லையில் அதிகாரிகள் மவுனம்
திருநெல்வேலி: திருநெல்வேலியில், அரசியல் கட்சியினர் 200 கோடி ரூபாயை, பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்ததால் வருமான வரித்துறை மற்றும் மத்திய தேர்தல் ஆணைய பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால், பணம் சிக்கவில்லை.
@1brதிருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துக்கு மேற்புறம் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில், நேற்று காலை 200 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேற்று காலை, வருமானவரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்றனர். தீவிர சோதனை நடத்தி உள்ளனர். ஆனால், பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, ஒரு அரசியல் கட்சி சார்பில் பட்டுவாடா செய்வதற்காக, 200 கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
உடனே, குறிப்பிட்ட கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடத்துக்குச் சென்று சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருப்பதால், உறுதியாக எந்த தகவலையும் வெளியே தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் இந்த விஷயத்தில் முழுமையான தகவல்கள் எதையும் சொல்ல மறுப்பதால், சோதனை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து உள்ளன.
வாசகர் கருத்து (6)
Nandakumar Naidu - ,
09 ஏப்,2026 - 22:05 Report Abuse
அதிகாரிகளை பதவியைப் பறித்து திகார் ஜெயிலில் 10 வருடங்கள் போட்டால் எல்லா உண்மையும் வெளிவரும். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
09 ஏப்,2026 - 20:37 Report Abuse
அரசியலில் சொற்ப தொகை. 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
09 ஏப்,2026 - 18:04 Report Abuse
அம்மா ஆட்சியில் நடந்த கண்டெய்னர் கதை போல உள்ளது? 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
09 ஏப்,2026 - 15:46 Report Abuse
போலீஸ் துணையுடன் திமுகவினர் தான் பதுக்கி வைத்து இருப்பார்கள். 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
09 ஏப்,2026 - 07:06 Report Abuse
TVK? 0
0
SANKAR - ,
09 ஏப்,2026 - 20:50Report Abuse
illainga.nynar like last time possibly.that too in tirunelveli.you forgot?! 0
0
Reply
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
Advertisement
Advertisement