கோடிகளை கொட்டி கொடுத்து காங்கிரசை ஸ்டாலின் சார் பையில் போட்டு கொண்டார்: விஜய் விமர்சனம்
சென்னை: ''சில, பல கோடிகளை கொடுத்து, ஸ்டாலின் சார், காங்கிரசை பையில் போட்டுக் கொண்டார். ஆனால், உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது,'' என, த.வெ.க., தலைவர் விஜய் பேசினார்.
திருநெல்வேலியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய் பேசியதாவது: ஸ்டாலின் சார் கையில் முழு அதிகாரம் இருந்தால், இந்த பிரசார கூட்டம் நடந்திருக்காது; ஏதாவது முட்டுக்கட்டை போட்டு, என்னை வர விடாமல் செய்திருப்பார்.
தி.மு.க., கூட்டணியும், பா.ஜ., கூட்டணியும் வெளியில் தனித்தனியாக இருந்தாலும், உள்ளுக்குள் ஒன்றுதான். தி.மு.க.,வின் கல்லா பெட்டி கூட்டணி கலகலத்து போய், எல்லாமே தனித்தனியாக நிற்கிறது. கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போடுவரா என தெரியவில்லை.
பா.ஜ., தலைமையில் இருக்கும் மற்றும் பலரின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சில, பல கோடிகளை கொடுத்து, ஸ்டாலின் சார், காங்கிரசை பையில் போட்டுக் கொண்டார். ஆனால், உண்மையான காங்கிரஸ், நம் பக்கம் தான் நிற்கிறது.
சிறுபான்மையினரிடம், தி.மு.க.,வின் சாயம் வெளுத்து விட்டது. கரூர் விஷயத்தில் என் மீது பழி போட்டனர்; ஜனநாயகன் படத்தை முடக்கினால், மிரண்டு விடுவான் என நினைத்தனர்; விஜய்க்கு மட்டும் தனி கட்டுப்பாடுகள் போடு; அவன் வெளியவே வரக் கூடாது என வழிகாட்டுதல்கள் வெளியிட்டனர்; எதுவும் எடுபடவில்லை.
எனவே தான், பல ஆண்டுகள் காத்திருந்து, தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், என்னை சுற்றியிருப்பவரை வைத்தே அவதுாறு கிளப்பினர்.
நான் எதை சொல்கிறேன் என உங்களுக்கு தெரியும்; அதுவும் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள் கொடுத்தாலும், தி.மு.க., - பா.ஜ.,வால் என்னை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது.
சட்டம் - ஒழுங்கு ஏன் சரியில்லாமல் போனது? இதற்கு, உங்களால் பதில் சொல்ல முடியுமா ஸ்டாலின் சார்? ஐந்து ஆண்டுகள் போலீசாரை பொம்மைகள் போல் வைத்து, விளையாடிக் கொண்டு இருந்தீர்களா; மனசாட்சி வேண்டாமா?
மண்ணை திருடுகின்றனர்; மலைகளை விழுங்குகின்றனர். சட்டவிரோதமாக கல் குவாரிகள் நடத்துகின்றனர். அமைச்சர்கள், குடும்பமாக கொள்ளை அடிக்கின்றனர். முழுக்க ஊழலில் ஊறி, ஆட்சி நாறிப்போய் கிடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, திருநெல்வேலியில் சில பகுதிகளில் விஜய் ரோடு ஷோ நடத்தினார். சாலையில் இருபுறமும் ஏராளமான கூட்டம் குவிந்தது. அதன்பின், துாத்துக்குடி சென்று அங்கும் பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்கிடையே, காங்., குறித்த விஜய் பேச்சுக்கு தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
@block_G@
திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடியில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரங்களின் பாதுகாப்பு பணியில், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய ஏழு மாவட்ட போலீசார் ஈடுபட்டனர். விஜய் பயணித்த தாழையூத்து, தச்சநல்லுார், வண்ணாரப்பேட்டை, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி சட்டக் கல்லுாரி, சாந்தி நகர் ஆகிய இடங்களில், கூடுதல் போலீசார் இருந்தனர்.
விஜய் வாகனத்தின் பின்னால் செல்வோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்ட போதிலும், வாகைகுளம் அருகே இரு பைக்குகள் மோதியதில், அடுத்தடுத்து வந்தவர்கள் கீழே விழுந்து ஏழு பேர் காயமடைந்தனர். இதுபோல், முறப்பநாடு பகுதியில், விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற மூவர் காயமடைந்தனர். சிலர், கையில் மொபைல்போனை வைத்து செல்பி எடுத்தபடி பைக்கை ஓட்டியதால் விபத்தில் சிக்கினர்.block_G
@block_B@ பெண்களை பார்த்து விசில்
திருநெல்வேலி, கே.டி.சி., நகரில் விஜயின் பிரசார கூட்டம் நடந்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டும், காலை 7:00 மணியில் இருந்தே தொண்டர்கள் வரத் துவங்கினர். விஜய் வருகைக்காக ஆறு மணி நேரம் காத்திருந்தனர். விஜய் வருவதற்கு முன்பே வந்துவிட்ட பலரும், பெண்களை பார்த்து விசில் அடித்தும், சினிமா பாடல்களை பாடியும் ரகளை செய்தது, பெண்களை முகம் சுளிக்க வைத்தது. கூட்டத்தில், நான்கு பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மயங்கினர்.block_B
நீ வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படும் சோம்பேறி! உன் வாய்க்கொழுப்பு மே 4 இல் அடங்கி விடும்! அதுவரை சவடால் விடு!
ஏன், விஜய் திமுக கொடுத்ததை விட கூடுதலாக கொஞ்சம் கொடுத்திருந்தால் காங்கிரஸ் கட்சியை அவர்கள் கூட்டணிக்கு கொண்டு வந்திருக்கலாமே!
நீங்க சொல்லியிருப்பது பாஜக ஃபார்முலா
திருட்டு திமுக ஃபார்முலா பல்லுனிக்கிறது பாலாஜி
வெற்றி மற்றும் பெற்றுவிட்டால் நீங்கள் அடுத்த எம் ஜி ஆர் தான்