முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இக்கோயிலில் மார்ச் 31 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் விழா நடைபெறும். நேற்று முன்தினம் பெண்கள் கோவிலும் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று பக்தர்கள் வேப்பிலையுடன் அக்னிசட்டி ஏந்தி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். 51, 101 அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பறவை காவடி, அலகு குத்தியும் பக்தர்கள் வந்தனர்.
ஏற்பாடுகளை நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர் தலைமையில், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசி முருகன் முன்னிலையில், அம்பலம் பிரேம்குமார், உறவின்முறை செயலர் சரவணன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் சுரேஷ்குமார், கல்லூரி செயலாளர் ஆசைதம்பி, பெண்கள் பள்ளி செயலாளர் ராம்குமார், ஆண்கள் பள்ளி தலைவர் ஜெய்கணேஷ், துவக்கப்பள்ளி செயலர் சௌந்தரபாண்டியன், இன்டர்நேஷனல் பள்ளி தலைவர் ராஜேஸ்குமார், கே.எஸ். பவுர்னா மருத்துவமனை செயலாளர் பிரசாத் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
___
மேலும்
-
பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை தாமதப்படுத்தக் கூடாது ; பிரதமர் மோடி
-
காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன் தான் விஜயைச் சந்தித்தேன்; உண்மையை உடைத்தார் பிரவீன் சக்கரவர்த்தி
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்