போலீஸ் செய்தி: வாலிபர் பலி

ராஜபாளையம்:ராஜபாளையம் அழகு தேவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு 30, நேற்று முன்தினம் மதியம் 2:15-க்கு அழகாபுரி சென்று டூவீலரில் திரும்பினார்.

அன்னப்ப ராஜா பள்ளி செக்போஸ்ட் எதிரே வந்த போது அரசு பஸ் டூ வீலர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தெற்கு போலீசார் பேரையூரை சேர்ந்த பஸ் டிரைவர் பாண்டி 47, மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement