போரால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு ரூ.2.50 லட்சம் கோடி கடன் உத்தரவாதம்; மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி: மேற்காசிய போரால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்கள், குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உத்தரவாத திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது.

தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

நிறுவனங்கள் வாங்கும் கடன்களுக்கு, 2.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உத்தரவாதம் அளிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், மேற்காசிய போரால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக நிறுவனங்கள் கடன் தவணையை கட்ட தவறினால், 100 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் திருப்பி அளிப்பதற்கான உத்தரவாதத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசு வழங்கும்.

அரசுக்கு சொந்தமான தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனம் வாயிலாக இந்த உத்தரவாதம் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக, அரசு 17,000 கோடி ரூபாய் முதல் 18,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும்.


இவ்வாறு தெரிவித்தன.


@block_B@கொரோனா காலத்தில் கைகொடுத்த திட்டம்


ஏற்கெனவே, கோவிட் - 19 தொற்றுநோய் நெருக்கடி காலத்தில் இத்தகைய கடன் உத்தரவாத திட்டம் குறுந்தொழில்களுக்கு மிகவும் கைகொடுத்தது. பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படவும், பிற்காலத்தில் தவணைகளை செலுத்தவும் இது உதவியது 'அவசரகால கடன் உத்தரவாத திட்டம்' என்ற பெயரில் 2020 மே மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், சிறு, குறு தொழில் கடன்களுக்கான உத்தரவாத அறக்கட்டளை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படும் கடன்களுக்கு, 100 சதவீத உத்தரவாதம் வழங்கப்பட்டது. block_B

எம்.எஸ்.எம்.இ., துறை பெற்ற கடன் 47.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு




'சி.ஆர்.ஐ.எப் ஹை மார்க்'- 'சிட்பி' நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்ட ஆய்வறிக்கை:

நாட்டின் சிறுதொழில் துறைக்கு கடன் வழங்கும் சூழல், 2025ல் வேகம் பெற்றுள்ளது. எம்.எஸ்.எம்.இ., துறைக்கு கடந்த ஆண்டு டிச., வரை 47.80 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.90 சதவீத ஆண்டு வளர்ச்சி ஆகும். இதில் 5 கோடி ரூபாய் வரை கடன்பெற்றுள்ள நிறுவனங்களின் தரவுகள் ஆராயப்பட்டுள்ளன. சிறுதொழில் கடன் நிலுவையில் 80 சதவீதம் தனி நபர் வணிகர்களால் பெறப்பட்டதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

@block_B@ * மொத்த கடன்களில் சிறு நகரங்களின் பங்கு 40 சதவீதம் * உத்தர பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், குஜராத்தில் கடன் வளர்ச்சி அதிகம்block_B

Advertisement