பா.ம.க., கொடி யாருக்கு? மூன்று இடங்களில் மோதல்
ராமதாஸ் வேட்பாளர்கள் பா.ம.க., கொடியை பயன்படுத்த, அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், களத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி தலைமையிலான பா.ம.க., 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள ராமதாஸ், 37 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ள தேர்தல் கமிஷன், கட்சியின் மாம்பழம் சின்னத்தை அவருக்கு ஒதுக்கியுள்ளது. இதனால், ராமதாஸ் வேட்பாளர்கள், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற பெயரில், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆனாலும் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள், பா.ம.க., கொடி, அதன் நிறத்தில் துண்டு அணிந்து வலம் வருகின்றனர். அன்புமணி ஆதரவாளர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
செஞ்சி தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் கணேஷை எதிர்த்து, ராமதாஸ் தரப்பில் கனல் பெருமாள் போட்டியிடுகிறார். பா.ம.க., கொடியுடன், அதன் நிறத்தில் துண்டு அணிந்து, பிரசாரம் செய்து வருகிறார். அவரை வழிமறித்த அன்புமணி தரப்பினர், 'நீங்கள் எப்படி பா.ம.க., கொடியை பயன்படுத்தலாம்' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில், ராமதாஸ் அறிவித்த வேட்பாளர்கள், பா.ம.க., கொடி, துண்டு அணிய, அன்புமணி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு பதிலடியாக, 'நாங்கள் பா.ம.க., கொடியை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ளதா; ராமதாஸ் படத்தை நீங்கள் பயன்படுத்தும்போது, கட்சி கொடியை நாங்கள் பயன்படுத்தக் கூடாதா? எங்களால் நீங்கள் தோற்கப் போகிறீர்கள்' என, ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும்
-
பாஜவை பார்த்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்; நயினார் நாகேந்திரன்
-
மாரியம்மன் கோயில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
-
புள்ளி, கமாவுக்காக எல்லாம் வேட்புமனு நிராகரிப்பு; தேர்தல் அதிகாரியிடம் வேல்முருகன் புகார்
-
கொந்தகையில் நுாற்றாண்டை கடந்த பாசன கிணறு
-
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா தீர்த்தவாரியுடன் நிறைவு
-
திருப்புத்துார் அருகே ரூ 5.47 கோடி பறிமுதல்