கூட்டணி கட்சியினருடன் புதிய பூத் கமிட்டி! தி.மு.க. - அ.தி.மு.க. தீவிரம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நொடியில் இருந்தே, சட்டசபை தேர்தல் பிரசார களம் பரபரப்பாக மாறிவிட்டது; கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்த புதிய பூத் கமிட்டிகள் அமைப்பதில், தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணிகள் தீவிரம் காட்டுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்தது; தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் பிரசாரத்தை அதிரடியாகத் துவக்கியுள்ளனர். வேட்பாளர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, பூசணிக்காய் மற்றும் சிதறு தேங்காய் உடைத்துவிட்டு நேற்று முன்தினம் முதல் தங்கள் ஓட்டு வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கூட்டணி கட்சிக் கொடிகள் பறக்க, குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீனப் பிரசார வாகனங்களில் நிர்வாகிகள் புடைசூழ வேட்பாளர்கள் வலம் வருகின்றனர். ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர்களை நேருக்கு நேர் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் வேட்பாளர்கள், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மக்களைக் கவர்ந்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினர் ஏற்கனவே களத்தில் இருக்கும் நிலையில், த.வெ.க. வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது தேர்தல் களத்தை நான்குமுனைப் போட்டியாக மாற்றியுள்ளது.
பூத் கமிட்டியே அஸ்திவாரம்
தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் பூத் கமிட்டிகளின் பங்களிப்பு முக்கியமானது என்பதால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் புதிய பூத் கமிட்டிகளை அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. வேட்பாளர்கள் பிரதான வீதிகளுக்கு மட்டுமே சென்று வரும் நிலையில், வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டியினர் தான் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, ஆதரவு ஓட்டுகளைச் சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சியினரை உள்ளடக்கிய புதிய கமிட்டிகள் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது.
கூட்டணி கட்சிப் பிரதிநிதிகள் கொண்ட தேர்தல் பணிமனைகளைத் திறந்து, ஓட்டு வேட்டையைத் தொடங்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகிவிட்டன.
@block_B@ பெண்களுக்கு முக்கியத்துவம் புதிய பூத் கமிட்டிகள் தான் நடுநிலை வாக்காளர்கள் மற்றும் புதுமுக வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களைத் தங்கள் பக்கம் திருப்பும் வேலையைச் செய்யும். குறிப்பாக, இந்த கமிட்டிகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பெண் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று தாய்மார்களிடம் அன்றாடம் பேசி ஓட்டுகளைச் சேகரிப்பது பெரும் பலமாக அமையும். - அரசியல் கட்சியினர்.block_B
மேலும்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி
-
விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி
-
'தினமலர் - தமிழ் சங்கம் நாசிக்' இணைந்து மஹாராஷ்டிரா தமிழர்களை கொண்டாடுகிறோம்