என்.ஆர்.காங்., வேட்பாளர் பாகூரில் ஓட்டு சேகரிப்பு

பாகூர்: பாகூர் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் தியாகராஜன் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

நேற்று சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிளுடன் வீடு வீடாக சென்று, கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி, ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது, தியாகராஜன் மஞ்சள் நிற ரேஷன்கார்டு தாரர்களுக்கு 5 லட்சம் ரூபாயிற்கு மருத்துவ காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்படும். மஞ்சள் நிற ரேஷன்கார்டு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோருக்கு, பைக் வாங்கிட ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

மீண்டும் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால் தான் மக்கள் நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி செயல்படுத்தப்படும்.

எனவே எனக்கு ஜக்கு சின்னத்தில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement