உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் இறுதி பிரசாரம்
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளர் கோபால் நேற்று இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியாவது:
புதுச்சேரியின் மிகவும் பின்தங்கிய உருளையன்பேட்டையை 1996க்கு பிறகு வளர்ச்சிப் பெற தொடங்கியது. காரணம் தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா.
நான்கு முறை இத்தொகுதியில் வெற்றி பெற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி முன்மாதிரி தொகுதியாக மாற்றி இருந்தார். ஆனால் கடந்த ஐந்தாண்டு காலம் இத்தொகுதியில் எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் பின்தங்கி உள்ளது.
நான் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றதும், சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்துவேன். இத்தொகுதி மீண்டும் புத்துயிர் பெற இரண்டாம் முறையாக போட்டியிடும் என்னை நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.