தேர்தல் ஆணையம் மீது புகார் கூறாத ஸ்டாலின்: புகார்களை அடுக்கும் மம்தா: எதிர்க்கட்சிகளுக்குள் ஏன் இந்த வேறுபாடு?
நமது சிறப்பு நிருபர்
எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் மீது முதல்வர் ஸ்டாலின் எந்த புகாரும் கூறாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா, தேர்தல் ஆணையம் மீது தினம் ஒரு புகாரை அடுக்கி வருகிறார்.
பொதுவாக ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் போதெல்லாம் தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் மீது பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காக கூறப்படுவது வழக்கம். கடந்த லோக்சபா தேர்தலின் போது கூட தேர்தல் ஆணையம் மீது சில புகார்களை திமுக கூறியது. இம்மோதல் போக்கை அதிகரிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலையும் தமிழகத்தில் சமீபத்தில் திருத்தம் செய்தது தேர்தல் ஆணையம்.
இதற்கு எதிராகக் கூட சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு தொடர்ந்தது திமுக. ‛‛இப்போதே தேர்தல் ஆணையத்துடன் திமுக மோதத் துவங்கி விட்டது. தேர்தல் நேரத்தில் இன்னும் என்னென்ன மோதல்களை திமுக நடத்தப் போகிறதோ'' என்று அப்போதே பலரும் பேசத் தொடங்கினர். ஆனால், நினைத்ததற்கு மாறாக இப்போது எதுவும் நடக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இத்தனைக்கும் திமுக ஆதரவு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முக்கிய பதவிகளில் இருந்து ஆணையத்தால் மாற்றப்படவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆனால் திரிணமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வரின் ஆதரவு அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். மம்தாவின் கடும் எதிர்ப்பை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
இதற்கு ஒரு படி மேலே போய், மேற்கு வங்க அதிகாரிகள் பலர் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்திற்கு அனுப்பப்பட்டனர். மம்தாவே இதை வெளிப்படையாக பேசிவிட்டார். ‛‛தமிழகத்தில் திமுக - பாஜ - காங்கிரஸ் இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது.
அதனால் தான் மேற்கு வங்க அதிகாரிகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்'' என்று குற்றம் சுமத்தி உள்ளார். இவர் இப்படி சொன்னதற்கு என்ன அர்த்தம் என்றால், ‛‛தேர்தல் ஆணையம் தமிழகத்தில் திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது'' என்பது தான். மத்தியில் ஆளும் பாஜ கூட்டணி அரசையும் பிரதமர் மோடியையும் ஸ்டாலின் கடுமையாக தாக்கிப் பேசுவதும், மோடியும் அமித்ஷாவும் திமுகவை கடுமையாக விமர்சிப்பதும் இன்னொரு பக்கம் நடந்துகொண்டு இருக்கின்றன.
பாஜ உடன் திமுக பகிரங்கமாக மோதிக்கொண்டு இருக்கும்போது, திமுகவுக்கு தேர்தல் ஆணையம் எப்படி சாதகமாக நடந்துகொள்ளும் என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம், ‛‛தமிழகத்தில் தேர்தல் ஆணையம் தனது பணியாக சரியாக செய்துகொண்டு இருக்கிறது. அதனால் தான் திமுக எந்த புகாரையும் தெரிவிக்கவில்லை'' என்று மற்றொரு தரப்பினர் சொல்கின்றனர். எப்படியோ, எல்லோரும் தங்கள் பணியை நேர்மையாக செய்தால் சரி தான்'' என்று பொதுமக்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர்.
ஸ்டாலின் இந்த தேர்தலில் தோற்கப்போகிறார்.
இது அவருக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனால் 5 - 10 வருடங்களுக்குப்பின் DMK பதவிக்கு வரும் என்று ஸ்டாலின் நம்புகிறார்.
ஆனால் மம்தாவுக்கு இனி திரும்பி வர CHANCE ஏ இல்லை.
ஆகையால் LADY MACBETH போல் வெறியும் பைத்தியமும் பிடித்து செய்யகூடாத செயல்களை செய்து கொண்டு வருகிறார்.
சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை
காரணம் ஒன்றே ஒன்றுதான் . தமிழக தேர்தல் அதிகாரிகள் விலைபோனவர்கள்
எப்படியும் தோற்க போகிறோம். எதற்காக அவர்கள் மனதை அநாவசியமாக புண்ணாக்க வேண்டும் என்று விட்டுருக்கலாம். தங்க மனசை தவறாக சந்தேகிக்காதீர்கள்
நாங்கெல்லாம் லெட்டர் எழுதி தபாலில் தான் அனுப்புவோம். முகவரி தமிழில் எழுதியதால் காணாமல் போயிருக்கலாம். அல்லது தபால் பெட்டியில் போடுவதற்கு பதிலாக வீட்டிலேயே பால் பெட்டியில் போட்டுருக்கலாம். தவறில்லாமல் கையெழுத்து போட்டதே வெற்றி தானே?
தமிழக தேர்தல் அதிகாரிகள் அத்தனை பேருமே திராவிட மாடலின் கூட்டு களவானி ஊழல் பெருச்சாளிகள்
பொதுமக்களுக்கு ஏக்கமா யார் சொன்னது அதெல்லாம் ஒன்றும் இல்லை. கட்சிகளிடமிருந்து இன்னும் பணம் வரவில்லையே என்றுதான் ஏங்குகிறார்கள். எவன் நாட்டை ஆண்டால் நமக்கென்ன நம்முடைய வாழ்க்கைத் தரம் இப்படியே தான் இருக்க போகிறது என்று நினைக்கிறார்கள்.
மம்தா இதுபோல் இன்னும் நிறைய சொல்லுவார் தேர்தல் நெருங்க நெருங்க
ராமரை ஏன் இங்கு கொண்டுவருகிறீர்கள்? அப்போ சட்டம் எதற்கு?
ஏல சீனு இப்போ சமாதானம் பத்தி பேசி பாரு...போவியா
கவலையை விடுங்கள். திமுகாவின் தொடரும் இறங்குமுகம் இன்னும் ஓரிரு நாட்களில் ஓப்பனாக தெரிய ஆரம்பித்தவுடன் வோட்டிங் மெஷின் மீது சந்தேகத்தை கிளப்புவார்கள். அடுத்து தேர்தல் நடக்கும்போதும், ஓட்டுகள் எண்ணி முடிக்கும் வரையிலும் , சென்ற முறை போல் உபி க்கள் கண்டைனர் லாரிகளை துரத்தி பிடிப்பது நடக்கும். ஸ்டாலினை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தேன் கருணாநிதி.மேலும்
-
பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை தாமதப்படுத்தக் கூடாது ; பிரதமர் மோடி
-
காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன் தான் விஜயைச் சந்தித்தேன்; உண்மையை உடைத்தார் பிரவீன் சக்கரவர்த்தி
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்