காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன் தான் விஜயைச் சந்தித்தேன்; உண்மையை உடைத்தார் பிரவீன் சக்கரவர்த்தி
புதுடில்லி: திமுகவும் காங்கிரஸும் தங்களுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு பல பரபரப்பு தகவல்கள் பரவியது. காங்கிரஸ் - தவெகவுடன் கூட்டணி இறுதியாக உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
தற்போது காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடனே விஜயைச் சந்தித்தேன் என ராகுல் நண்பரும், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி உண்மை நிலவரங்களை அம்பலப்படுத்தினார். இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:
கேள்வி: காங்கிரஸ் தலைமையின் அனுமதியுடன்தான் நீங்கள் விஜயைச் சந்தித்தீர்களா?
பிரவீன் சக்கரவர்த்தி: இந்தச் சந்திப்புகளை நான் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளவில்லை. கடந்த ஆறு மாதங்களில் நான் செய்த அனைத்தும் செயல்களும், காங்கிரஸ் தலைமையின் சம்மதம் மற்றும் ஒப்புதல்பெற்ற பிறகே செய்தேன். கட்சியின் நலனுக்காக, விமர்சனங்களை எதிர்கொள்ளவும், பலிகடாவாக மாறவும் நான் தயாராகவே இருந்தேன்.
நான் செய்த அனைத்தும் என் கட்சியின் சிறந்த நலனுக்காகவே தான். தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று என் கட்சியைச் சேர்ந்தவர்களே பலவிதமாகப் பேசியது எனக்குத் தெரியும். ஆனால், மற்றொரு மூத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியும், விஜயுடனான சந்திப்பில் கலந்துகொண்டார்.
கேள்வி: கூட்டணி அமைப்பது குறித்து ஏதேனும் முறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றனவா?
பிரவீன் சக்கரவர்த்தி: அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன். ஆனால் நாங்கள் அரசியல் குறித்துப் பேசினோமா? நிச்சயமாகப் பேசினோம். நாங்கள் தமிழக அரசியல் குறித்துப் பேசினோமா? என்றால் அது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
கேள்வி: ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை கைவிட்டு, கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையை, திமுக தலைவர் ஸ்டாலின் எவ்வாறு சம்மதிக்க வைத்தார்?
பிரவீன் சக்கரவர்த்தி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனுமனைப் போன்றது; அதற்குத் தன் சொந்த பலமே தெரியாது. இம்முறை கட்சியைப் புதுப்பிக்கவும், மீண்டும் கட்டமைக்கவும், பலப்படுத்தவும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக நாங்கள் கருதினோம்.
காங்கிரஸ் கட்சிக்கும், குறிப்பாக ராகுலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. அத்தகைய சூழல் நிலவும் ஒரு மாநிலத்தில், தன்னை வலுப்படுத்திக்கொள்ள ஒரு தேசியக் கட்சி ஏன் கடுமையாக உழைக்காது.
அப்படியிருக்கையில், ஒரு காங்கிரஸ் கட்சித் தொண்டரோ அல்லது தலைவரோ அமைச்சராகி, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஏன் ஆசைப்பட மாட்டார்கள்? எங்கள் கோரிக்கையில் நியாயமற்றது என்று எதுவும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
கேள்வி: ராகுல் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டிய கூட்டத்தில், தவெகவுடனான கூட்டணியை எத்தனை கட்சி நிர்வாகிகள் ஆதரித்தனர்?
பிரவீன் சக்கரவர்த்தி: அது தவெக அல்லது திமுக பற்றிய விவாதமாக இருந்ததென்று நான் கருதவில்லை. பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நிர்வாகிகள், எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்பதையே ஆதரித்தனர் என்று நான் சொல்வேன்.
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைச் சிலர் ஆதரித்தனர். ஒரு சிலரோ, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாவிட்டால், நாம் வேறு மாற்று வழிகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினர்.
கேள்வி: களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் எவ்வாறு இணக்கமாகச் செயல்படுவார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பிரவீன் சக்கரவர்த்தி: தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் தொண்டர்கள் உணர்கிறார்கள். தங்களுக்கு இடங்கள் கிடைக்காததால் கட்சித் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். நாம் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
கேள்வி: திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
பிரவீன் சக்கரவர்த்தி: இது ஒரு கடுமையான போட்டி நிறைந்த தேர்தலாக இருக்கும். தவெக ஓட்டை பிரிக்கும். இது ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எல்லா மட்டேரையும் புல்லாக சொல்லிடாதீங்க. ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொஞ்சம் கொஞ்சமாக கூறுங்கள். அப்போதுதான் சுவரிசியம் கூடும்
ஊருக்கு நாலு பேர் இருந்துட்டு இன்னா ரவுசு பாருங்க இவன்து...? இந்தாளு பழைய காங்கிரஸ் கட்சி..ன்னு அதிலும் 1970 காங்கிரஸ் கட்சின்னு நினைச்சிட்டிருக்கார்... அதிலும் அப்ப தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ்காரனுங்க வெள்ள குல்லா மாட்டிகிட்டு சுத்திட்டிருந்த காலம்னு நினைச்சிட்டிருக்கார்... இது 2026ன்னு தெரியலை போலிருக்கு...? அவனவன் அந்த நடிகர், இந்த நடிகர்...னு அவன் பின்னால ஓடிட்டிருக்கான்... இந்தாளு காமெடி பண்றார்...?
தீ.மு.க வின் காங்கிரஸ் பிரிவு தலைவர்கள் நாளை இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பார்கள்!
என்தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்!
வெளியில் கூட்டணி என்று பெயர் அளவுக்கு இருந்தாலும், சரியான கூட்டணியாக இல்லை என்பதை இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.
பிஜேபி தமிழகத்தில் சமூக என்ஜினீயரிங் செய்வதாக நினைத்தும் திமுக ஆதரவு வாக்குகளை பிரிக்க நினைத்தும் இறக்கி விட்டிருக்கும் புது புது கட்சிகள் பிஜேபிக்கே உலைவைக்கும் என்பதை புரிந்துகொள்ள இந்த தேர்தல் உதவும். ஆர் எஸ் எஸ் ஐ பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் அமுலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அதர்ம முறையில் அதீத பணம் சேர்த்த தனிநபர்களை திமுக தவிர்த்து பிறகட்சிகளில் ஊடுருவ வைத்து காரியங்களை சாதித்துக்கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பாடம் கற்பிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
200க்கு வேற அப்பா ஜாதியில் கருத்து போடா வேண்டியிருக்கே ...
வேற எந்த சாதிப் பெயரை பயன்படுத்தினாலும் பொளந்து கட்டிடுவானுக என்கிற அச்சத்தால் எந்த வம்புக்கும் வராதவங்க பேரை போட்டுக்கொண்டு போலி மதச்சார்பின்மை போலி சமூகநீதி பேசும் 200 ஓவா கொத்தடிமை ஃப்ரீயாக உலா வருது.
நாம் தமிழர் கட்சி பெற்ற 8-9% தில் பெரிய ஓட்டை போடப்படும் என்று இந்த பிரவீன் சக்ரவர்த்தி சொல்லி இருந்தாரேயானால் அதில் ஓரளவு உண்மை இருந்திருக்கும். வரும் தேர்தல் இதை ஆணித்தரமாக நிரூபிக்கும். பிறகு இதுபோன்ற ஏழாம்படையினரின் வாய் காலத்துக்கும் இதுபோல திறக்கவே திறக்காது.
அவர் சார்ந்த கட்சியை சொல்கிறார்...இதில் தங்களைப்போன்றோரின் அதிமேதாவித்தனம் அடுத்தவரை கட்சியை எப்படி கணிக்க முடியும்... இந்த முட்டுக்கு எவ்வளவு எக்ஸ்ட்ரா கிடைக்குமோ ? ...ஹாஹா
திமுக பிரவீன் சக்ரவர்த்தி சார்ந்த கட்சி இல்லை. காங்கிரஸ் தான் அவர் சார்ந்த கட்சி என்று நினைவூட்டுகிறேன் .
தவெக ஒரு துஷ்ட சக்தி என்பதால் மீண்டும் அவரை சந்திக்கவில்லேயோ
தேர்தல் நேர அலப்பறை ஆரம்பித்து விட்டது
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒருவருக்கு இந்த தளம் முக்கியத்துவம் தருகிறது என்றால் அவர் பற்றி என்னமாதிரி நினைக்கதொன்றும் ? காங்கிரஸ் கட்சியின் ஏழாம்படை இவர்.
எந்த அடிப்படையில் தற்குறிகளின் கட்சி ஆளும் கட்சியின் வாக்குகளை பிரிக்கும் என்று கூறுகிறார் ?எதாவது தரவு வைத்திருக்கிறாரா ? தரவுகள் இருக்குமெனில் அந்த தரவுகள் ஆணித்தரமானவை என்றல் காங்கிரஸ் எதற்கு திமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் ? திமுகவுக்கேனே இருக்கும் வாக்கு வங்கி நிரூபிக்கப்பட்ட ஒன்று . இந்த வாக்குவங்கி கொள்கை ரீதியிலான ஒன்று. சினிமா கவர்ச்சி இல்லாத கொள்கைப்பிடிப்பு கொண்ட வாக்குவங்கி. இதில் ஓட்டை போடுவது தென்னைமரத்தில் நெய் இறக்கநினைப்பது போல. சினிமா மோக வாக்கு வங்கி அதிமுக வாக்குவங்கி. இதில் ஓட்டைபோடுவது மிக சுலபம் . நடுநிலை வாக்காளர்கள் தேர்தலுக்கு தேர்தல் சூழ்நிலையை பொறுத்து நிற்கும் வேட்பாளர்களை பொறுத்து மாற்றி வாக்களிப்பது ஒவ்வொரு தேர்தலிலும் நடப்பதுதான். இந்த வாக்கு வங்கி தேர்தல் முடிவுகளை பெரும் அளவில் மாற்றி அமைக்கும். புதிதாக களம்கண்டுள்ள நடிகர் கட்சி வாக்கு வங்கி நிரூபிக்கப்படாத ஒன்று. இந்த நடிகர் கட்சி அவர்கள் வாக்கு வங்கி அவர்களின் கருத்துக்கணிப்புப்படி கூறியவை பெரும் நகைப்புக்குளாகியது .அந்த நடிகரின் ரசிகர் கூட்டம் ஒவ்வொரு தொகுதியிலும் 3-4 % இருக்கலாம். நடுநிலை வாக்காளர்களின் ஒரு 3-4 % வாக்குகளை இந்த நடிகர் கட்சி ஈர்க்கலாம் . எப்படி கணக்கு போட்டாலும் அந்த 3-4% ரசிகர் கூட்டம் மொத்தமும் திமுக வாக்கு என்று பிரவீன் சக்ரவர்த்தி கூறுகிறாரா ? அப்படி கூறினால் அது எவ்வளவு நகைப்புக்குரிய விஷயமாக இருக்கும். ? தனிநபர் கணக்குகளை தீர்த்துக்கொள்ள பொதுவெளியில் எதையாவது பேசித்திரிவதை காங்கிரஸ் மேலிடம் ஏற்பதும் நகைப்புக்குரிய விஷயம். இதில் ஒரு முக்கிய விஷயம் அந்த நடிகர் ரசிகர் கூட்டத்தில் பாதிக்கு மேல் வாக்கு செலுத்தும் வயதை அடையாத தற்குறிக்கூட்டம் . இது குறித்து பிரவீன் சக்ரவர்த்தி சிந்தித்தாரா ?
இன்னும் ஒரு மாசம் தான் அதுக்குள்ளே ...மேலும்
-
மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
-
பித்தளை - செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
இறுதிக்களத்தில் 116 வேட்பாளர்கள்! மாவட்டத்தில் இனி 'அனல்' பறக்கும்
-
பொள்ளாச்சி - 13, வால்பாறை - 6, கிணத்துக்கடவு - 5 பேர் போட்டி
-
தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை
-
கத்தரி சாகுபடியில் மகசூல் இழப்பு தவிர்க்க அறிவுரை