பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
திருச்சி: துறையூர், காசி விஸ்வநாதர் கோவில் முகப்பில் இருந்த சிற்பங்களை சிலர் பெயர்த்து எடுத்துச் சென்றதாக, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர், மூங்கில் தெப்பக்குளம் அருகே, பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், கடந்த 2024ல் கும்பாபிஷேகம் நடை பெற்றது. இருப்பினும் , சில பணிகள் மட்டும் நிறைவடையாமல் உள்ளன.
அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலாக இருந்த போதிலும், அங்கு பராமரிப்பு பணிகள் செய்த சிலர், கோவிலை கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். இந்த கோவிலின் நுழைவாயில் மண்டபத்தின் மீது, சிவபெருமான் வரலாற்றை கூறும் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
முன் மண்டபத்தின் மீது உள்ள சுதை சிற்பங்களுக்கு வர்ணம் பூசுவதற்கு, தனியார் அமைப்பினர் அறநிலையத் துறையிடம் அனுமதி கோரி இருந்தனர்.
இந்நிலையில், கோவில் முன் மண்டபத்தின் மீது இருந்த சிற்பங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தன.
கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயலட்சுமி, ஸ்ரீதர், நக்கீரன் ஆகிய மூவர் சிலையை உடைத்ததாக, துறையூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும்
-
வழிப்பறி செய்த இருவருக்கு 7 ஆண்டுகள் தண்டனை காஞ்சி நீதிமன்றம் உத்தரவு
-
என்னை அவதுாறாக பேசினால் வேடிக்கை பார்க்க மாட்டேன்: பழனிசாமி ஆவேசம்
-
வைகை ஆற்றில் சாக்கு மூடைகளில் வேகம் எடுக்கும் மணல் கொள்ளை பள்ளமாகும் ஆற்றில் மக்களுக்கு ஆபத்து
-
சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறேன் தி.மு.க., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு
-
பேரூராட்சி மக்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 150 நாள் வேலை அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் உறுதி
-
100 நாள் வேலை 150 நாளாக வழங்கப்படும்- அ.தி.மு.க., வேட்பாளர் மரகதம் உறுதி