ராணுவ தடகள வீரர்களுக்கான இளம் சிறுவர் தேர்வு முகாம்

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் ராணுவ சிறுவர் விளையாட்டு கம்பெனியில் ஆண்டுதோறும் சிறந்த தடகள வீரர்கள் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வருங்கால தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் இளம் திறமையானவர்களை கண்டறிய இந்த முகாம் நடத்தப்படுகிறது.

இதுவரை மாநிலங்களுக்கு மட்டும் என இருந்த இந்த முகாமில் விதிமுறைகளில் மாற்றம் செய்து தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த, 6ம் தேதி முதல் நேற்று வரை, இதற்கான தேர்வு நடந்தது. 13 முதல் 16 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவணங்கள் சரிபார்த்தல், தடகளபோட்டி நடத்தி தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவர்களுக்கு பிளஸ்---2 வரை இலவச கல்வி, உயர்தர விளையாட்டு பயிற்சி அளிப்பதுடன் திறமை மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் விளையாட்டு ஒதுக்கீட்டில் ராணுவத்தில் சேரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வெலிங்டன் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணனேந்து தாஸ் தலைமையில் ராணுவ அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Advertisement