சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்

சென்னை: கேரளாவில் கொண்டாடப்படும் விஷூ பண்டிகையை ஒட்டி, சென்னையில் இருந்து கேரளா வழியாக, கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு, சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

★ சென்னை, எழும்பூரில் இருந்து, நாளை மதியம் 2:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூர் செல்லும்

★ மங்களூரில் இருந்து, வரும் 15ம் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:45 மணிக்கு எழும்பூர் வரும். இந்த சிறப்பு ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியாக இயக்கப்படும். முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

Advertisement