கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி 

பண்ருட்டி: கடலுார்- மேல்பட்டாம்பாக்கம் வரையிலான கஸ்டம்ஸ் சாலை கண்டரக்கோட்டை வரை நீட்டிக்கப்படும் என அ.தி.மு.க.வேட்பாளர் உறுதியளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை அரசியம்மன் கோவிலில் இருந்து அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரம் வழங்கி நேற்று பிரசாரத்தை துவக்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் பொதுச்செயலாளர் பழனிசாமி மகளிருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திடுவார்.

மகளிருக்கு மாத தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 25 லட்சம் மகளிருக்கு 25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டி வழங்கப்படும். விவசாய கூட்டுறவு கடன் வழங்கப்படும். கரும்பு விலை உயர்த்தி வழங்கப்படும்.

கடலுார்- கண்டரக்கோட்டை கஸ்டம்ஸ் சாலை கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்டது. இதில் கடலுார்-மேல்பட்டாம்பாக்கம் வரை கஸ்டம்ஸ் சாலை உள்ளது. மேல்பட்டாம்பாக்கம் முதல் கண்டரக்கோட்டை பணி நடைபெறாமல் உள்ளது.

அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் கடலுார்-மேல்பட்டாம்பாக்கம் வரையிலான கஸ்டம்ஸ் சாலை கண்டரக்கோட்டை வரை விரிவுபடுத்தப்படும். இதனால் எளிதில் கடலுாருக்கு சென்று வரமுடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement