தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 07) ஆபரண தங்கம் கிராம் 13,860 ரூபாய்க்கும், சவரன் 1,10,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஏப்ரல் 08), தங்கம் விலை கிராமுக்கு 340 ரூபாய் உயர்ந்து, 14,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,720 ரூபாய் அதிகரித்து, 1,13,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 10,000 ரூபாய் அதிகரித்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து 260 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
குறையும் போது கம்மியாக குறைகிறது அதிகரிக்கும் போது அளவுக்கு அதிகமாகவே அதிகரிக்கிறதுமேலும்
-
மணிமுத்தாறு சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு வீரபாண்டி தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
-
'தேர்தலுக்கு பின் மக்கள் மன்றத்தில் இருந்து விஜய் வெளியேறி விடுவார்'
-
ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு
-
தர்மபுரியில் தே.மு.தி.க., பிரேமலதா பிரசார
-
எண்ணற்ற திட்டங்களை கொடுத்தவர் இ.பி.எஸ்., சங்ககிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
-
ஓசூரில் நாளை பிராமணர் குடும்ப கலாசார விழா