விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 157.99 க்கு விற்பனை

உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோ ரூ.157.99க்கு விற்பனையானது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.

இன்று மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா என்பதால், நேற்று ஏலம் நடந்தது. இதில், 23 விவசாயிகள், 200 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 5 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.

முதல் தரம், ரூ.149.99 முதல், ரூ.157.99 வரையும், இரண்டாம் தரம், ரூ.136.03 முதல், ரூ. 148.79 வரையும், இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடக்கும் இ-நாம் திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது.

இத்திட்டத்தில், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், மேலும் விபரங்களுக்கு, 94880 00163 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பொறுப்பு அருண்குமார் தெரிவித்தனர்.

Advertisement