திருவிழாவில் தினமும் அம்மன் திருவீதி உலா

உடுமலை: தேர்த்திருவிழாவையொட்டி, மாரியம்மன் நாள்தோறும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஒவ்வொரு நாளும் உற்சவ விக்ரகம் காமதேனு, யானை, ரிஷபம், அன்னம், சிங்கம், மயில், குதிரை, ஆகிய வாகனங்களில் இரவு நேரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

மேற்படி திருவிழாக்காலங்களில் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மக்கள் மகிழும் வண்ணம் நடைபெறுகின்றன.

திருவிழாவின், 15ம் நாள் அம்மனுக்கு திருக்கல்யாணம் சிறப்புடன் நடைபெற்று, திருத்தேர் விழா சீருடனும் சிறப்புடனும் நடைபெறுகிறது.

Advertisement