ஈரோடில் பணிமனை திறப்பு ;காங்., நிர்வாகிகள் 'ஆப்சென்ட்'
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி காங்., வேட்பாளராக, திருப்பூர் மாவட்ட முன்னாள் காங்., தலைவர் கோபிநாத் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிக்கான தேர்தல் பணிமனை, பெருந்துறை சாலையில் திறக்கப்பட்டது.
கிழக்கு தொகுதி காங்., வேட்பாளர் கோபிநாத், மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் முத்துசாமி உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். அதேநேரம், காங்., கட்சியில் இம்மாவட்டம், ஈரோடு பகுதியை சேர்ந்த நபர்கள் நிறுத்தப்படாமல், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நிறுத்தப்பட்டதாக கூறி, அதிருப்தியும், நிர்வாகிகள் புறக்கணிப்பும், சில போராட்டங்களும் நடந்து வருகின்றன.
வேட்பாளர் கோபிநாத்தை ஏற்காத நிர்வாகிகளை அவர்களது வீடு, கடைகளில் கோபிநாத் நேரடியாக சந்தித்து, ஆதரவும், பிரசாரத்தில் பங்கேற்க கோரியும் அழைப்பும் விடுத்து வந்தார். இருப்பினும், நேற்றைய தேர்தல் பணிமனை திறப்பில், மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் விஜயபாஸ்கள் உட்பட, குறைவான எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
காங்., தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மக்கள்ராஜன், மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.பி.ரவி, மண்டல தலைவர் ஜாபர் சாதிக், மாநகராட்சி கவுன்சிலர் சபுரமா, மாவட்ட நிர்வாகிகள் சிராஜூதீன் உட்பட, பெரும்பாலானவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தது, கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும்
-
பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை தாமதப்படுத்தக் கூடாது ; பிரதமர் மோடி
-
காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன் தான் விஜயைச் சந்தித்தேன்; உண்மையை உடைத்தார் பிரவீன் சக்கரவர்த்தி
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்