இஸ்ரேல் பிரதமருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு
ஜெருசலேம்:ஈரான் மீதான போர் நிறுத்த முடிவை இஸ்ரேல் ஆதரிப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். போர் நிறுத்தத்திற்கு ஈரான் வைத்த நிபந்தனைகளில், லெபனான் மீதான போர் நிறுத்தமும் ஒன்று.
இந்த நிபந்தனைக்கு ஆதரவு தெரிவித்ததாக பெஞ்சமின் நெதன்யாகுவை, இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
ராணுவம் தன் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றியது; பொதுமக்கள் மன உறுதியைக் காட்டினர். ஆனால், நெதன்யாகு அரசியல் ரீதியாகவும், தன் கடைமையை நிறைவேற்றுவதிலும் தோல்வி அடைந்துவிட்டார்.
தேசியப் பாதுகாப்பின் முக்கிய விஷயங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டபோது, இஸ்ரேல் அந்த விவாத மேசையில் கூட இருக்கவில்லை. இதுபோன்ற ஒரு அரசியல் பேரழிவு ஒருபோதும் நிகழ்ந்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபரிமலை விவகாரம் சம்பிரதாயமா, ஆணாதிக்கமா? உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்
-
சமூக ஊடகங்களில் ஆபாச வார்த்தை கைது உறுதி
-
அயர்லாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் அதிகரிப்பு
-
11 நாட்களில் இரட்டிப்பாகும் பணம்: பேராசையில் ரூ.12 கோடி இழந்த டாக்டர்
-
மனைவி மீது 80 வழக்குகள் தொடர்ந்த கணவர் ரூ.5 கோடி ஜீவனாம்சம் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு 10 ஆண்டு நீடித்த விவாகரத்து வழக்கு முடித்து வைப்பு
-
ஐ.டி., நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை: 6 'டீம் லீடர்'கள் உட்பட ஏழு பேர் அதிரடி கைது
Advertisement
Advertisement