ரூ. 12.91 கோடி கஞ்சா பறிமுதல் பெண் கைது
புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில், 12.91 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பெண் பயணி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மார்ச் 31ம் தேதி டில்லி வந்த விமான பயணியரிடம் வழக்கமான சோதனை நடத்தப்பட்டது.
ஒரு பெண் பயணி கொண்டு வந்திருந்த 13 பாலித்தீன் பைகளில், 1.2 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு 12.91 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
Advertisement
Advertisement