நாளை முதல் 'பூத் சிலிப்' வீடு வீடாக வழங்க ஏற்பாடு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வரும், 10 முதல் 17 வரை 'பூத் சிலிப்' வழங்கும் பணி நடக்க உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதி
களில், 8 லட்சத்து, 47,197 ஆண்கள், 9 லட்சத்து, 11,778 பெண்கள், 182 மூன்றாம் பாலினத்தவர் என, 17 லட்சத்து, 59,157 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வரும், 23ல் 2,379 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர். இவர்களுக்கு வரும், 10 முதல் 'பூத் சிலிப்' வழங்க உள்ளனர்.
இதுபற்றி, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
ஒவ்வொரு தேர்தலிலும், தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர்-களுக்கு பூத் சிலிப் வழங்கி வருகிறது. இத்தேர்தலுக்கும் விடுதல் இன்றி அனைத்து வாக்காளர்களுக்கும் வரும், 10 முதல், 17ம் தேதிக்குள் அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.,) 'பூத் சிலிப்பை' வழங்க உள்ளனர்.இம்முறை 'பூத் சிலிப்' எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு, ஓட்டு செலுத்தும் நடைமுறை மற்றும் செலுத்த தேவையான ஆவணங்கள் ஆகி-யவை அடங்கிய வாக்காளர் வழிகாட்டி ஆகியவற்றையும் சேர்த்து வழங்க உள்ளனர். 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்ய, 'பூத் சிலிப்' முழுமையாக வழங்கப்படும்.
குறிப்பிட்ட வீட்டில் வாக்காளர்கள் பணிக்கு சென்றிருந்தால், வீடு பூட்டியே இருந்தால், அவர்களது 'பூத் சிலிப்' அந்தந்த ஓட்-டுச்சாவடி வளாகத்தில் உரிய அலுவலரிடம் இருக்கும். அங்கு சென்று சேகரித்து கொள்ளலாம். தவிர, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி-யிலும் ஓட்டு செலுத்த செல்லும் வாக்காளர், தனது மொபைல் போனை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை. எனவே, 'பூத் சிலிப்' வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் பணி அலு-வலரிடம் தங்களது மொபைல் போனை வழங்கிவிட்டு, ஓட்டுப்ப-திவை நிறைவு செய்துவிட்டு வந்து மீண்டும் போனை திரும்ப பெற்று செல்லலாம், என்றனர்.

Advertisement