மீடியன் மீது மோதியது கார்:டிரைவருக்கு தீவிர சிகிச்சை
குருகிராம்:துவாரகா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில், வேகமாக சென்ற டயோட்டா கார், மீடியன் மீது மோதியதில், டிரைவர் காருக்குள் சிக்கிக் கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை காரிலிருந்து மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
டில்லியிலிருந்து குருகிராம் நோக்கி சென்ற கார் விபத்தில் சிக்கியது குறித்து, எக்ஸ்பிரஸ் வே போலீசார் விசாரிக்கின்றனர். அவர்கள் அளித்த தகவலின் படி, அந்த கார் டிரைவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த டிவைடர் மீது மோதிய டயோட்டா காரில் இருந்த டிரைவர் சாலையோரம் காரில் கிடந்தார். அவரை மிகுந்த சிரமத்திற்கு பின் மீட்ட, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய டிரைவர், இன்னமும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. அவர் கண் விழித்தால் தான், அவர் பற்றிய தகவல்கள் தெரிய வரும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
-
35 கட்சிகளை தனியே த.வெ.க., எதிர்க்கிறது
-
ஒருபோதும் காசு, பதவிக்காக நான் தடம் மாற மாட்டேன்: நடிகர் ராமராஜன் விளக்கம்
Advertisement
Advertisement