விஜயகாந்தை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் :தே.மு.தி.க., நிர்வாகிகளிடம் பிரேமலதா உத்தரவாதம்

2

விருத்தாசலம்: 'விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கச் செய்து, நானே மாவட்ட செயலாளராக செயல்படுவேன்' என தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு பிரேமலதா நம்பிக்கை அளித்தார்.

விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளராக பிரேமலதா போட்டியிடுகிறார். இதையொட்டி அப்பகுதியில், தே.மு.தி.க., தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து வரவேற்றார். மாநில துணை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் ராஜாராம், பொருளாளர் ராஜ், துணை செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் ராஜ்குமார், நகர தலைவர் சங்கர், பொருளாளர் கருணாநிதி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பிரதிநிதி பாலா, வழக்கறிஞர் செல்வம், இளைஞரணி சக்கரபாணி, மாநில செயற்குழு ரமேஷ், நிர்வாகிகள் மோகன், ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் பொன்தனசேகர், செம்பை, ஜெயராஜ், சேகர், பச்சமுத்து, மங்கலம்பேட்டை செயலாளர் முத்து பங்கேற்றனர்.

கூட்டத்தில், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதாவது:

ஸ்டாலின் மீண்டும் முதல்வரானதும், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க செய்வேன். அதன்பின், விருத்தாசலம் மாவட்டத்துக்கு நானே மாவட்ட செயலராக பொறுப்பேற்று, முன்மாதிரியாக மாற்றுவேன். தொகுதி பணிகள் குறித்து அமைச்சர் கணேசனிடம் பேசியுள்ளேன். விஜயகாந்தை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள். உங்களை நான் அரசு பதவிகளில் பார்க்க விரும்புகிறேன்.

கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து செயல்படுங்கள். வெற்றி மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, மாவட்ட துணை செயலாளர் மருங்கூர் ராஜவன்னியன் தந்தை ராஜவேல் மறைவுக்கு, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Advertisement