தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி

குருகிராம்:டில்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மானேசர் என்ற இடத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், பேச்சு நடத்திய போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது; கலைந்து செல்லுங்கள் என கூறினர். எனினும், அந்த தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் கலைந்து செல்லாமல், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் லேசான தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர்.

இதில் தொழிலாளர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் உட்பட பலர் காயமடைந்தனர் என போலீசார் கூறினர். அந்த பகுதியில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க போலீசார் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Advertisement