91 அரசு பள்ளிகளில் 235 பேர் சேர்க்கை





கோபி: கோபி யூனியனில், 71 அரசு துவக்க பள்ளிகள், 20 நடுநிலைப்-பள்ளி என, 91 பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், 2,648 மாண-வர்கள், 2,552 மாணவியர் என, மொத்தம் 5,200 பேர் பயில்கின்-றனர். அவர்களுக்கு போதிக்க, 216 இடை நிலை ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான, அரசு பள்-ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச், 1ல் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று வரை, கோபி யூனியனுக்கு உட்பட்ட, 91 பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் மட்டும், 210 குழந்தைகளும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வகுப்பு வரை, 25 பேர் என, 235 பேர் புதிதாக சேர்ந்துள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement