வெயில் தாக்கம் அதிகரிப்பு: கரும்பு 'ஜூஸ்' விற்பனை ஜோர்
நாமக்கல்: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில், தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்-றனர்.
அதனால், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, நகரின் பல்-வேறு பகுதிகளில் இளநீர், நுங்கு, கரும்பு ஜூஸ், வெள்ளரி பிஞ்சு, தர்ப்பூசணி, குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவை விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகி-றது.
அவற்றை வாங்கிப்பருகி, தங்களது தாக சாந்தியை தீர்த்துக்கொள்கின்றனர். மேலும், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலை, திருச்சி சாலை, துறையூர் சாலை, மோகனுார் சாலை மற்றும் கோட்டை சாலை-களில், ஏராளமான தள்ளுவண்டி கடைகளில், கம்மங்கூழ் விற்-பனை செய்து வருகின்றனர். கரும்பு ஜூஸ் விலை குறைவாக இருப்பதுடன், ஐஸ் கலந்து தருவதால், ஜில்லென்று இறங்குகி-றது. அதனால், ஒருவர், இரண்டு, மூன்று டம்ளர் வாங்கி பருகுகின்-றனர். அதன் மூலம், ஓரளவுக்கு வெயிலில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பதால், கரும்பு ஜூஸ் கடைக்கு, மக்கள் கூட்-டமும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும்
-
கனவுகளால் கடலை வென்ற பார்வையற்ற பெண்
-
கள் இறக்கும் எளியவர்கள் பயங்கரவாதிகளா? தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆவேச கேள்வி
-
அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் விழிப்புணர்வு
-
தொண்டர்கள் 'அட்ராசிட்டி': 'பளார்' விட்ட திருமா
-
எப்போதும் ஏ.சி.யில் இருக்கிறீர்களா? உடனே எலும்பு பரிசோதனை செய்ங்க!
-
புறவழி சாலைக்காக முடக்கப்பட்ட நிலங்கள்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விடுவிப்பு