100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு
சூலூர்: ஓட்டளிப்பது கடமை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் பெருமையாகும். 100 சதவீதம் அனைவரும் ஓட்டளிப்போம், என, பீடம் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும், 23 ம்தேதி நடக்க உள்ளது. தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை எட்ட வேண்டும், என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், கோலம் வரைந்து, வாக்காளர்களிடம், 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தப்பட்டது.
ஊராட்சியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வண்ணக் கோலங்கள் வரைந்து, ஓட்டளிப்பது கடமை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் பெருமையாகும். தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழாவாகும். 100 சதவீதம் அனைவரும் ஓட்டளித்து, ஜனநாயகத்தின் பெருமையை நிலை நாட்ட வேண்டும் என, வாக்காளர்களிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், 100 சதவீதம் ஓட்டளிப்போம், அனைவரையும் ஓட்டளிக்க வைப்போம், என, உறுதி ஏற்றுக்கொண்டனர்.
இதேபோல், காங்கயம்பாளையம், பதுவம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
மேலும்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்