பழமை வாய்ந்த கோவில்  பாரம்பரியம் காக்கும் மக்கள் 

உடுமலை: கொங்கு திருநாட்டு திருப்பூர் மாவட்டத்தில் அமராவதியும் பாலாறும் அருகே இருந்து அழகு செய்யும் ஊர் உடுமலை. பழநியிலிருந்து மேற்கே 37 கி.மீ., தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து கிழக்கே 30 கி.மீ., தொலைவிலும், தெற்கு திருமூர்த்திமலையில் இருந்து 23 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ள எங்கும் புகழும் ஏற்றமிகு உடுமலையில், பொள்ளாச்சி பழநி பாதையில் மாரியம்மன் திருக்கோயில் சீருடனும் சிறப்புடனும் திகழ்கின்றது.

இங்கு அமைந்துள்ள மூல விக்ரகத்தின் முன் அம்மன் சுயம்பு ஒன்று தானாக எழுந்து, தனிச்சிறப்பு பெற்று அருள் பாலிக்கிறது என்ற பெருமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவில் கட்டப்பட்டதாக தெரிவிக்கின்றனர். சோழியகவுண்டர் வம்சாவளியான ஸ்ரீதர் கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வாகித்து வருகிறார்.

தளி பாளையப்பட்டு எத்தலப்பர் வம்சாவளியினரால், திருக்கோவிலின் பூஜை காரியங்களுக்காக நிலங்கள் விடப்பட்டுள்ளது.

Advertisement